Freitag, 7. November 2008

தமிழ்புத்தாண்டு பலன்கள் 2008

13.04.2008 - 13.04.2009
13.04.08 அன்று சர்வஜித் முடிந்து சர்வதாரி ஆரம்பிக்கிறது. சர்வதாரி சித்திரை (13.4.2008) முதல் சர்வதாரி பங்குனி மாதம் (13.04.2009)வரை உள்ள ஒரு வருடத்திற்கான பலன்கள் இதோ!
சமீபத்தில் குரு, சனி, ராகு,கேது போன்ற மிக முக்கியமான கிரகங்கள் இடம் மாறியிருப்பதால் 12 ராசிகளுக்குமே அடுத்து வரும் 12 தமிழ் மாதங்கள் முந்தைய காலத்தைவிட மிக வித்தியாசமான நிகழ்வுகளைத் தரக்கூடியவையாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமே இல்லை! மேலும் அடுத்த 12 மாதங்களுக்குள் மற்றொரு குரு பெயர்ச்சியும் நடக்க உள்ளது.
எந்தெந்த ராசிகளுக்கு நல்ல அமைப்பாக உள்ளது? எந்தெந்த ராசிகளுக்கு நன்மையளிக்கும் எந்தெந்த ராசிகளுக்கு சிரமம் ஏற்படும்? எவற்றிற்கு நன்மை தீமை இரண்டும் இல்லை? எவற்றிற்கு நன்மை தீமை இரண்டும் உண்டு? பார்ப்போமா?


மேஷம்
சொத்துக்கள் வாங்குவீர்கள். எதிரிகளும் நண்பர்களாவார்கள். உற்சாகமும் மகிழ்ச்சியும் மனதில் அதிகரிக்கும். உங்கள் இயல்பிலேயே மென்மை அதிகரிக்கும். தெய்வீக விஷயங்களில் மனம் செல்லும்.
சகோதர சகோதரிகளுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளுக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை உண்டாகும். நவம்பர் 08 க்குப் பிறகு குழந்தைகளுடன் சற்று அனுசரித்துப் போக வேண்டியிருக்கலாம்.
கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். கலை மற்றும் திரைத் துறையில் உள்ளவர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் ஏற்படும்.
தாயார் உடல் நிலையில் கவனம் தேவை. வாகனத்தால் செலவுகள் ஏற்படலாம். ஆனால் நவம்பர் 08 க்குப் பிறகு வீடு வாகனம் ஆகியவற்றால் லாபம் ஏற்படும்.
அலுவலகம் மாறுவீர்கள். அனேகமாக வெளி நாட்டில் வேலை கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு நவம்பர் 08 க்குப் பிறகு மிக இனித திருப்பங்கள் உண்டு.
மாணவர்களுக்கு மிக நல்ல முறையில் மதிப்பெண்கள் கிடைக்கும்
புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்.

ரிஷபம்
சகோதரர்களுடன் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியிருக்கும். நல்ல செலவுகள் (சுப செலவுகள்) அதிகம் செய்ய ஆரம்பிப்பீர்கள்.
குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். நிதி நிலை ஏற்றமும் இறக்கமுமாக மாற்றி மாற்றி இருக்கும். எனினும் அலுவலகத்தில் உரிய கெளரவமும் வருமானமும் குறையாது.
தாயாருக்கு நிதி நிலை மேம்படும். அவரால் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். நவம்பர் 08 க்கு முன்னால் வாகனங்கள் வாங்குவதாலும் விற்பதாலும் நன்மைகள் ஏற்படும்.
ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். நவம்பர் 08 க்குப் பிறகு நீங்கள் சற்றும் எதிர்பாராத நன்மைகளும் லாபங்களும் உங்களை வந்தடையும்.
வெளிநாட்டு வருமானங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 08 க்குப் பிறகு வாழ்க்கை வசதிகள் அதிகரிக்கும். புதிய பொருட்கள் தங்க நகைகள் ஆகியவை வாங்குவீர்கள்.
மாணவர்கள் சற்றே அதிகமான உழைப்பையும் முயற்சியையும் மேற்கொண்டால் போதும். நன்மைகள் நிச்சயம் உண்டு.
அலுவலகத்தில் சற்று அதிகமாக உழைக்க வேண்டிய வந்தாலும் அதற்கேற்ற லாபங்களும் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். எனினும் பதவி உயர்வு சம்பந்தமான தேர்வுகள் போன்றவை இருந்தால் அவற்றிற்காக நீங்கள் சற்று அதிகமாக உழைத்துத் தயார் செய்தால்தான் உரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம்

மிதுனம்
திருமணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வார்த்தைகளைக் கட்டுப்படுத்தப் பாருங்கள். நீங்கள் நல்ல முறையில் பேசப் பேச, நன்மைகளும் லாபங்களும் அதிகரிக்கும்.
சகோதரர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் நன்மை உண்டாகும்.
கணவன் மனைவிக்குள் மிக நல்ல உறவு நிலைக்கும். பொருட்கள் வாங்குவதாலும் விற்பதாலும் நிறைய லாபங்களை எதிர்பார்க்கலாம்.
உடல் நிலையில் மிகுந்த கவனம் தேவை. ஏற்கனவே ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை அதை அவ்வப்போது சோதித்து சரிபார்த்துக் கொள்வது நல்லது
நவம்பர் 08 க்குப் பிறகு ஆரோக்யத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கும். நல்ல காரியங்களுக்காகவும் சுப காரணங்களுக்காகவும் செலவுகள் செய்வீர்கள்.
எதிர்பாராத பண வரவு நிறைய உண்டு. நவம்பருக்குப்பிறகு வீடு அல்லது அலுவலகம் இடம் மாறலாம்.
இரும்புபோன்ற பொருட்களால் லாபமும் நன்மையும் உண்டாகும். புதியவேலைக்கு மாறுவீர்கள்.
மாணவர்கள் குறைந்த முயற்சியிலேயே மிகுந்த நன்மைகளை அடையப் போகிறீர்கள்

கடகம்
சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட உள்ளதால் உணவு உடை உங்கள் சூழ்நிலை ஆகியவற்றை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளப் பழகுங்கள்.
நவம்பர் வரை பேச்சினால் பெரிய நன்மைகளை அடைவீர்கள். செல்வமும் சேமிப்பும் அதிகரிக்கும். நவம்பருக்குப்பிறகு மிகவும் கவனமாகப் பேச வேண்டும். வீடு வாகனங்கள் முதலியவை வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
நண்பர்களால் வாழ்க்கையில் பெரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம். நவம்பர் மாதம் வரை கணவன் மனைவிக்குள் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் அவை எல்லாம் நவம்பருக்குப் பிறகு மிகவும் சுமுகமான சூழ்நிலை நிலவும்.
கணவர்/ மனைவி வெளிநாடு செல்வார். மொத்தமாகவே குடும்பத்திற்கு லாபங்கள் அதிகரிக்கும். தாயாருக்கு நன்மைகள் அதிகமாக நடக்கும்.
அழகிய வாகனங்கள் வாங்குவதாலும் விற்பதாலும் நன்மையும் அதிகரிக்கும்.
மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து முனைந்து படித்தால் நன்மைகளை எதிர்பார்க்கலாம்

சிம்மம்
இடமாற்றம் நல்ல காரணத்திற்காக ஏற்பட்டு அது நல்ல பலனையும் தரும். வேலை போன்ற காரணங்களால் குடும்பத்தைவிட்டு சிறிதுகாலம் பிரிந்திருக்க வேண்டியிருந்தாலும் அது நல்ல பலனையே தரும். செலவுகள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கட்டுப் பாட்டிற்குள் வரும்.
உங்கள் தனிப்பட்ட கவர்ச்சி அம்சம் காரணமாக உங்கள் அலுவலகத் தொடர்புகள் மூலமாக லாபமும் நன்மையும் அடைவீர்கள்.
புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்.
வாழ்க்கை வளங்கள் பெருகும். ஒரு சிலருக்கு அலுவல் காரணமாகக் குடும்பம் ஓரிடம் நீங்கள் வேறிடம் என்று இருக்க வேண்டியிருக்கும். எனினும் வருமானம் குறைவின்றி வருவதால் எல்லோரையும் உங்களால் திருப்திப் படுத்த முடியும்.
குழந்தைகள் மிகுந்த பெருமை சேர்ப்பார்கள். குழந்தையை வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருந்தவர்களுக்கு எண்ணமும் விருப்பமும் ஈடேறும் காலம் வந்துவிட்டது
நண்பர்கள் மிக அதிகரிப்பார்கள். வெளிநாட்டில் உள்ள நண்பர்களால் மிகுந்த நன்மைகளை எதிர்பார்கலாம்.
மாணவர்களுக்கு நினைத்ததைவிடப் பெரிய வெற்றிகள் கிடைக்கும்

கன்னி
மாணவர்களுக்குப் பொற்காலம். நிறைய மதிப்பெண்கள் பெற்று முதலிடம் வகிப்பீர்கள்.
குழந்தைகளால் சில டென்ஷன்களை அனுபவிக்க வேண்டி வரலாம்.
வெளி நாட்டு வருமானம் அதிகரிக்கும். சில சுப காரியங்கள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன அல்லவா. அவை எல்லாம் நல்ல முறையில் முடியும்.
எழுத்து, இசை கலைத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு மிகுந்த புகழ் கிடைக்கும்.
கடுமையாக இரவு பகலாக உழைத்து நிறைய லாபங்களும் நன்மைகளும் பெறுவீர்கள். காதல் நிறைவேறும். திருமணம் கைகூடும்.
தள்ளிப் போய்க்கொண்டிருந்த சுப காரியங்கள் நடந்து நிறைவேறும். உத்யோகத்தில் நிறைய முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
நண்பர்களிடம் சற்று அளவோடு வைத்துக் கொள்வது நல்லது.
நவம்பருக்குப் பிறகு நன்மைகளை அதிகமாக எதிர்பார்க்கலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தை இல்லாமல் கவலைப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.
மாணவர்கள் சற்று முயற்சிகளை முடுக்கிவிட்டால் போதும். நல்ல பலன்கள் உண்டு.

துலாம்
சுப காரியங்கள் தள்ளிப் போகிறதே என்று கவலை வேண்டாம். 2008 ஆம் ஆண்டு இறுதியில் நல்ல பலன்கள் உண்டு.
அவ்வளவாக ஒற்றுமை இல்லாமல் இருந்த தம்பதிக்கிடையே சுமுகம் நிலவும்.
நிறையப் பொருட்கள் வாங்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். நவம்பருக்குப் பிறகு வாகனங்கள் வாங்குவீர்கள்.
அதிகம் உழைத்த பிறகே அதற்கான நன்மைகளை அடைவீர்கள். எனினும் உழைத்த உழைப்புக்குக் குறைவின்றி லாபங்களைப் பார்க்கலாம். நவம்பருக்குள் அலுவலகம் அல்லது தொழில் சம்பந்தமான நன்மைகளை அடையலாம்.
திடீர் அதிருஷ்ட வாய்ப்பும் எதிர் பாராத நன்மைகளும் உண்டு.
தாயாருக்கும் உங்களுக்கும் இடையே நிலவி வந்த சுமுகமான சூழலில் சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவரை அனுசரித்துப் போகப் பாருங்கள். அல்லது அவரது உடல் நிலையில் சிறு பிரச்சனை வந்தாலும் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள்
அலுவலக சூழலில் எல்லோரிடமும் சற்று அதிக கவனத்துடன் பழகுங்கள். வேலையில் மிகவும் கவனத்துடன் இருந்து தவறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்
மாணவர்கள் நிறைய முனைந்து படிக்க வேண்டும்.

விருச்சிகம்
பேச்சினால் நன்மைகள் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு கூடும்.
குடும்பத்தில் அமைதியும் ஒற்றமையும் நிலவும். சகோதரர்களின் மனம் கோணாத வகையில் நடந்து கொள்வது நல்லது. நண்பர்களால் பெரிய நன்மைளை எதிர்பார்க்கலாம். நீங்களும் அவர்களுக்கு நிறைய நல்லது செய்வீர்கள்.
இத்தனை காலமாகக் கவலையளித்துக் கொண்டிருந்த ஆரோக்யம் இப்போது நல்ல முறையில் உங்களுக்கு மன நிம்மதி அளிக்கும்.
எதிர்பார்த்த நன்மைகள் கைக்கெட்டாமல் போகக்கூடும். அது தற்காலிகத் தடைதானே தவிர நவம்பருக்குப் பிறகு நிலைமை சீரடையும்.
அலுவலக விஷயங்கள் எல்லாமே தற்று தடை தாமதத்துக்குப் பிறகு நல்லமுறையில் நடந்தேறும். சற்று பொறுமையாக இருங்கள். லாபங்கள் உண்டு. நீங்கள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்பார்த்த நன்மைகள் இந்த ஆண்டின் முடிவில் நிறைவேறும்.
மாணவர்களுக்கு நிறைய மதிப்பெண் கிடைக்கும்

தனுசு
தன்னம்பிக்கை குறையாமல் உற்சாகம் குன்றாமல் வளைய வந்தாலும் திடீர் திடீரென்று அர்த்தமற்ற காரணமற்ற பயம் ஒன்று மனதில் தோன்றும். அப்படித் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். பேச்சினால் மற்றவர்களைப் புண்படுத்தாமல் இருக்கப் பாருங்கள். அசுப வார்த்தைகளை சொல்ல வேண்டாம். நீங்கள் சொல்லும் வார்த்தைகள் பலிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் கவனமாகப் பேசுங்கள்.
குடும்பத்தில் நிலவி வந்த ஒற்றுமைக் குறைவு நபம்பருக்குப் பிறகு சரியாகும்.
குழந்தைகளால் நன்மையையும் மகிழ்ச்சியையும் எதிர்பார்க்கலாம். பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது/ சேருவது போன்ற விஷயங்களில் மன அமைதி குன்றியிருந்தவர்களுக்கு எல்லாம் நல்ல முறையில் முடிந்து மகிழ்ச்சி உண்டாகும்
குழந்தைகள் உங்களைப் பெருமைப்படுத்தும்படியாக நடந்து கொள்வார்கள்.
கணவன் மனைவிக்குள் மிகுந்த ஒற்றுமை நிலவும். உத்யோகத்தில் பங்குதாரர்களால் நன்மையையும லாபத்நதையும எதிர்பார்க்கலாம்.
வாழ்க்கை வசதிகள் மிக அதிகமாகும்படியாக பொருட்களை வாங்குவீர்கள். நீங்கள் நினைத்தவையும் ஆசைப்பட்டவையும் நடந்தேறும்
புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்.
மாணவர்கள் ஓரளவு முயற்சி செய்தாலே நிறைய நன்மைகள் கிடைக்கும்.

மகரம்
முன்பைவிட அதிகக் கோபம் வர வாய்ப்பு உள்ளது. அதற்கு வாய்ப்பளிக்காதீர்கள். யாரையும் மனம் புண்படப் பேசிவிட்டுப் பிறகு வருத்தப்பட வேண்டாம்.
அலுவலகத்தில் அனைவரிடமும் குறிப்பாக மேலதிகாரியிடம் இன்முகத்துடன் பேச வேண்டியது அவசியம். நிறைய செலவுகள் செய்வீர்கள். அவை நல்ல காரணங்களுக்காக உதவும்.
சருமம் சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்யத்தைப் பராமரித்து உணவுப் பொருட்களில் கட்டுப்பாட்டுடன் இருங்கள்.
கணவன் மனைவிக்குள் பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.குடும்பத்தில் வாக்கு வாதத்தை வளர்க்க வேண்டாம். குழந்தைகள் பரிசுகளும் விருதுகளும் வாங்கிக் கொண்டு வந்து உங்களை மகிழ்ச்சிக்கு உள்ளளாக்குவார்கள்.
வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருங்கள். வாகனங்களை வாங்கி விற்பதன் மூலம் நவம்பருக்கு முன்னால் ஓரளவு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
நிறைய உழைக்க வேண்டியிருந்தாலும் எல்லாமே தடை தாமதத்துக்குப் பின் நிறைவேறினாலும் இறுதி முடிவு மகிழ்ச்சியையே அளிக்கும் என்பதால் நீங்கள் பெருமைப்படலாம்.
மாணவர்கள் தேர்வுகளுக்கு சற்றுஅதிக முயற்சி எடுத்துப் படிக்க வேண்டும். முயற்சிக்கேற்ற பலன்கள் உண்டு

கும்பம்
சிறிதும் எதிர்பார்க்காத லாபங்களும் நன்மைகளும் உங்களை வந்தடையும். பதவி உயரும். வாழ்க்கைத் தரம் மேம்படும்.
நண்பர்களுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கலாம்.
இத்தனை காலம் எவ்வளவு முயற்சி செய்தும் நிறைவேற்ற முடியாமல் சில காரியங்கள் அப்படி அப்படியே நின்றுகொண்டருந்தன. அவை எல்லாம் இனிதே நிறைவேறும்.
செலவுகள் நன்கு கட்டுப்படும். வெளிநாட்டு விஷயங்கள் சம்பந்தமாக செலவு செய்ய வேண்டி வரலாம். ஏற்றுமதி இறக்குமதி லாபம் தரும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் நன்மைகள் உண்டு. நவம்பருக்குப் பிறகு மனைவியின்/ கணவரின் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
சகோதர சகோதரிகள் உங்களுக்குப் பல வகைகளில் உதவிகரமாக இருப்பார்கள்.
குழந்தைகள் வாழ்வில் மிகுந்த முன்னேற்றம் உண்டு.
கணவருக்கு / மனைவிக்குப் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்.
மாணவர்கள் சிறிதளவு முயற்சியிலேயே பெரிய வெற்றிகளைக் காணலாம்

மீனம்
குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் எதிர்பார்த்திருந்த நன்மைகள் நவம்பருக்குப் பிறகு கைகூடும். திருமணமாகிக் குழந்தையை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு நவம்பருக்குப் பிறகு நல்ல செய்தி உண்டு.
நண்பர்களுக்கு நீங்கள் நன்மை செய்வீர்கள். ஆனால் அவர்களிடமிருந்து அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது.
பேச்சினால் நன்மைகள் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர் வீட்டுத் திருமணங்களில் கலந்து கொண்டு அங்கு மேலும் பலரை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள். அவர்களால் நன்மை அடைவீர்கள்.
நவம்பருக்குப் பிறகு அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த நற்பலன்களைப் பெறுவீர்கள்.
வெளிநாட்டிலிருந்து நன்மைகளையும் லாபங்களையும் எதிர்பார்க்கலாம். வீட்டில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சுப காரியங்கள் நடைபெறும்.
வியாபாரிகளுக்கு லாபங்கள் குறையக்கூடும். எனினும் சிறிது சிறிதாக நன்மை அதிகரிக்கும். உழைப்பையும் முயற்சியையும் குறைக்க வேண்டாம்
மாணவர்கள் ஓரளவு முயற்சி எடுத்துப் படித்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்.

Keine Kommentare: