மேஷம்
50/100 (சுமார்)
கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பவர்களே, நல்ல நிர்வாகத் திறனும், பரந்த அறிவும், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறியும் அசாத்தியத் திறனும் உள்ளவர்களே! உங்கள் ராசிநாதனான அங்காரகனின் அவிட்ட நட்சத்திரத்திலும் உங்களுக்கு லாப ராசியிலும் இந்த புத்தாண்டு பிறப்பதால் குடும்பத்தில் அமைதி ஓங்கும். சலசலப்பு குறையும். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அரைகுறையாக இருந்த வேலைகள் உடனே முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். ஜீன், ஜீலை மாதங்களில் நவீன மின்சாரம் மற்றும் மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் கைக்கு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை சூரியன் வலுவாக இருப்பதால் திடீர் பணவரவு, வழக்கில் சாதகமான தீர்ப்பு மற்றும் மனதிற்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். தாயாருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் நீங்கும். மே, ஜீன், ஜீலை மாதங்களில் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கிட்டும். ஏப்ரல், மே மாதத்தில் செவ்வாயும், சூரியனும் வலுவிழந்திருப்பதால் முன்கோபம் வரும். சகோதர பகை, அலைச்சல் வந்து நீங்கும். சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து விலகும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து விலகும். கண்எரிச்சல், இரத்த அழுத்தம் வந்து நீங்கும். ஆகஸ்டு, செப்டம்பர் மாத மத்திய பகுதி வரை சூரியன் பாபகிரக சேர்க்கை பெறுவதால் கர்ப்பினிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்ப ரகசியங்களை அக்கம்-பக்கம் வீட்டாரிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். 26.9.2009 முதல் சனி உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிற்கு செல்வதால் பழைய கடன் பிரச்சனை தீரும். 27.10.2009 முதல் கேது வலுவடைவதால் புது முயற்சிகளில் வெற்றி உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு பெருகும். எலக்டரானிக்ஸ்,மூலிகை வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். சம்பளம் திருப்திகரமாக இருக்கும். இந்த புத்தாண்டு சிறுசிறு இடையூறுகளை தந்தாலும் இறுதியில் உங்களை வெற்றி பெற வைக்கும்.
ரிஷபம்
80/100 (சூப்பர்)
விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செயல்படும் நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்கள். எல்லையில்லா அன்புக்கு எடுத்துக் காட்டாக விளங்குபவர்களும் நீங்கள்தான். அப்படிப்பட்ட உங்களின் ராசிக்கு 10-வது ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதால் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், ஆகஸ்டு ஆகிய மாதங்களில் திடீர் யோகம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். மகளுக்குத் திருமணம் தள்ளிப் போய் கொண்டிருந்ததே! இனி நல்ல மாப்பிள்ளை அமைவார். கல்யாணம் சிறப்பாக முடியும். சகோதர வகையில் இருந்த குழப்பம் தீரும். பூர்வீக சொத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய பெரிய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நட்பால் ஆதாயமடைவீர்கள். செப்டம்பர் மாத முற்பகுதி மற்றும் டிசம்பர் மாத பிற்பகுதியில் எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தையின் ஆரோக்கியத்திற்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். ஆனால் வருடம் பிறக்கும் போது செவ்வாயும், சூரியனும் 8-ல் மறைந்து கிடப்பதால் உடன்பிறந்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் வரும். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், செலவுகளும் வந்து நீங்கும். சிலர் உங்கள் மேல் வீண்பழி சுமத்துவார்கள். அரசு காரியங்கள் தடைபட்டு முடியும். மே, ஜீன், ஜீலை மாதங்களில் குரு 10-ம் வீட்டிற்கு செல்வதால் மற்றவர்கள் சொல்வதை நம்பாமல் யோசித்து முடிவெடுங்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். நீண்ட காலம் பழகியவர்களாக இருந்தாலும் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடாமல் இருப்பது நல்லது. செப்டம்பர் 15 முதல் வாகனப் பழுது வந்து நீங்கும். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். 26.9.2009 முதல் சனி பகவான் 5-ம் வீட்டிற்குள் நுழைவதால் கர்ப்பினிப் பெண்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. அதிக பளுவை தூக்குவதோ, மாடிப்படி ஏறுவதோ கூடாது. 27.10.2009 முதல் ராகு-கேது இடம் மாறுவதால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வந்துப் போகும். பார்வைக் கோளாறு, மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் தொல்லை கொடுத்து வந்த வேலையாட்களை மாற்றுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கூட்டுத் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் வேலைச்சுமையும், வீண் பழியும் வந்தாலும் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். சக ஊழியர்களை அனுசரித்துப் போவது நல்லது. வேற்று மதத்தவர், மொழியினர் உதவுவார்கள். இந்த 2009-ம் ஆண்டு தடை கற்களை படிகட்டுகளாக்கி நினைத்ததை அடைய வைக்கும்.
மிதுனம்
50/100 (கவனம்)
மனிதர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ளவர்களே! துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமைதாங்கிகளே! உங்கள் யோகாதிபதியான சுக்ரன் 9-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் வளங்கள் சேரும். உடல் ஆரோக்யம் கூடும். மார்ச் மாதம் மத்தியிலிருந்து குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஓயும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீண் சந்தேகம் விலகும். முடிக்க முடியாதென கைவிட்ட காரியங்களை கூட கச்சிதமாக முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வருட மத்தியில் குரு சாதகமாக இருப்பதால் பணப்பற்றாக்குறையினால் அறைகுறையாக இருந்த வீடு கட்டும் பணி வங்கிக் கடன் உதவியால் முமுமையடையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிட்டும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அயல்நாடு செல்வார். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்த படி நல்ல குடும்பத்திலிருந்து வரன் அமையும். புது வண்டி வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்கள் வரும். ஈகோ பிரச்சனை வேண்டாமே. உடன்பிறந்தவர்களால் அலைச்சலும், செலவுகளும், மனஸ்தாபங்களும் வந்து நீங்கும். தாய்வழி உறவினர்கள் சிலர் நன்றி மறந்து உங்களிடம் சண்டையிடுவார்கள். ஜீலை 15 முதல் வேலைச்சுமை, சைனஸ் தொந்தரவு, கனவுத் தொல்லை, முதுகு வலி, நரம்புப் பிடிப்பு வந்து நீங்கும். கட்டி வந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம். வருடப் பிற்பகுதியில் வாகன விபத்து வரக்கூடும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தங்க ஆபரணங்கள் இரவல் தர வேண்டாம். வியாபாரத்தில் புதுக் கிளையை தொடங்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். என்றாலும் வருடப் பிற்பகுதியில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் இருக்கும் கருத்து மோதல்களை பேசித் தீர்க்கப் பாருங்கள். புதுப் பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களால் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். இடமாற்றம் உண்டு. இந்த புத்தாண்டு முற்பகுதியில் முன்னேற்றத்தையும் இறுதிப்பகுதியில் வேலைச்சுமையையும் தருவதாக அமையும்.
கடகம்
70/100 (நன்மை)
நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாக கணிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். குரு உங்கள் ராசியை பார்த்ததுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் அறைகுறையாக நின்ற பல வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் திருப்பம் உங்கள் வாழ்விலே உண்டாகும். பதுங்கி பயந்திருந்த நீங்கள் இனி பளிச்சென எல்லோர் கண்ணிலும் படுவீர்கள். பணத்தட்டுப்பாடு நீங்கும். ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டுக்குள் வரும். பணவரவு உண்டு. கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். ஒரே வீட்டில் இருந்தும் ஒட்டு உறவில்லாமல் வாழ்ந்த தம்பதியர்கள் இனி ஒன்று சேர்வார்கள். மழலை பாக்யம் கிடைக்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். தாயாருடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். 26.9.2009 முதல் ஏழரைச் சனி முழுமையாக விலகுவதால் அதுமுதல் எதிலும் ஏற்றம் உண்டு. உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். பல வருடங்காளாக பேசாமல் இருந்த உறவினர்கள் வலிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். 27.10.2009 முதல் கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால் ஒற்றை தலை வலி, முன்கோபம், சோர்வு யாவும் நீங்கும். எல்லோரிடமும் சலிப்புடன் பேசினீர்களே! இனி அன்பாகப் பேசி அனைவரையும் ஈர்ப்பீர்கள். எதிர்காலத் திட்டங்களை தீட்டுவீர்கள். மார்ச் மற்றும் ஏப்ரல் மத்திய பகுதி வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால் சில காரியங்கள் உடனே முடிக்க முடியாமல் தாமதமாகும். உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உடல் வலி, தைராய்டு பிரச்சனை, சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். வண்டி அடிக்கடி செலவு வைக்கும். மே, ஜீன், ஜீலை ஆகிய மாதங்களில் குரு 8-ம் வீட்டிற்கு சென்று மறைவதனால் சுபச் செலவுகள், எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். 7.10.2009 முதல் செவ்வாய் உங்கள் ராசிக்குள் நீச்சம் பெற்று அமர்வதால் நண்பர்களிடம் அளவாக பழகுவது நல்லது. வீண்பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உணவு, மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். பதவி உயர்வு உண்டு. இந்த புத்தாண்டு சோர்ந்திருந்த உங்களை உற்சாகப்படுத்துவதுடன் அடிப்படை வசதிகளை அமைத்துத் தருவதாக அமையும்.
சிம்மம்
50/100 (சோர்வு)
எதிரிக்கும் நல்லதே நினைக்கும் எண்ணங்கொண்ட நீங்கள், எப்போதும் ஒற்றுமை உணர்வுக்கு உரம் அளிப்பவர்கள். நம்பி வந்தவர்களுக்கு உதவும் மனசுப்படைத்தவர்கள். இனிமையாக காரியங் களைச் சாதிப்பவர்களும் நீங்கள் தான். உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். தைரியம் கூடும். சுக்ரன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தடைப்பட்ட திருமணம் முடியும். வீடு கட்டும் பணி நிறைவடையும். பிப்ரவரி முதல் மே மாதம் வரை சுக்ரன் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைந்து தனஸ்தானத்தை பார்ப்பதால் பணப்புழக்கம் குறையாது. புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்துப் போனதே! இனி விட்டுக் கொடுத்துப் போவீர்கள். உங்களை விரோதியாக பார்த்தவர்களெல்லாம் மனம் மாறி வந்து பேசுவார்கள். பிள்ளைகளின் வருங்காலத்தில் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல மணமகள் அமைவார். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மே, ஜீன், ஜீலை மாதங்களில் குரு 7-ம் வீட்டிற்கு செல்வதால் குழந்தை பாக்யம் கிட்டும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. செப்டம்பர் மாத இறுதியில் ஜென்ம சனி விலகுவதால் தோல் நோய், ஞாபக மறதி, நெஞ்சு வலி விலகும். உறவினர் பகை நீங்கும். தடைப்பட்ட காரியங்கள் உடனே முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். அக்டோபர் மாத இறுதியில் ராகுவும்-கேதுவும் சாதகமாக மாறுவதால் தாழ்வுமனப்பான்மை நீங்கும். பழைய கடனை தீர்க்க புது வழி கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வேற்றுமதத்தவர், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். ஏப்ரல் மத்திய பகுதியிலிருந்து மே இறுதி பகுதி வரை மற்றும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் செவ்வாயின் போக்கு சரியில்லாததால் சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் கவனம் தேவை. ஜீலை மத்திய பகுதியிலிருந்து உங்கள் ராசிநாதன் சூரியன் பலவீனமடைவதால் உடல் நலம் பாதிக்கும். யாருக்காகவும் ஜாமின் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களின் விவகாரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் ஒருபுறம் இருந்தாலும் லாபத்திற்கு குறையிருக்காது. புது வேலையாட்களை சேர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் வேலைசுமை இருந்தாலும் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரி உங்கள் திறமையை பாராட்டுவார். பதவியும், சம்பளமும் உயரும். இந்த புத்தாண்டு மாறுபட்ட அனுபவங்களை தந்தாலும் மற்றவர்கள் மதிக்கும்படி செய்யும்.
கன்னி
60/100 (நம்பிக்கை)
தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வாதங்களில் வெல்வீர்கள். பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப் படுத்துவீர்கள். உங்கள் 6-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாளாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தந்தை வழி உறவினர்கள் உங்களை காயப்படுத்தினார்களே இனி உங்களைப் புகழ்ந்து பேசுவார்கள். கடனாக பணம் கொடுத்து ஏமாந்தீர்களே அந்த பணம் கைக்கு வரும். ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் விலை உயர்ந்த நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் எதிர்பார்த்த படி பணம் வரும். மகனுக்கு பெரிய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சுகமான நினைவுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள். வருட மத்தியப் பகுதியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஜனவரி மாதத்தில் சுக்ரன் 6-ல் மறைவதால் மருத்துவச் செலவுகளும், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளும் வந்து நீங்கும். மே 22 முதல் ஜீலை 2 வரை 8-ல் செவ்வாய் இருப்பதால் முன்கோபம், சகோதர பகை, சொத்து வாங்குவதில் சிக்கல்கள், இழப்புகள் வந்து விலகும். தலைச் சுற்றல், பார்வை குறைவு, நரம்புக் கோளாறு ஏற்படலாம். மே, ஜீன், ஜீலை மாதங்களில் குரு 6-ல் மறைவதால் மனக்குழப்பங்களும், அலைச்சல்களும், வீண் பழிகளும் வந்து நீங்கும். செப்டம்பர் மாதப் பிற்பகுதியில் ஜென்ம சனி தொடங்குவதால் உணவில் கட்டுப்பாடு தேவை. எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. அண்டை அயலாருடன் அளவாகப் பழகுங்கள். வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் காண்பீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இந்த புத்தாண்டு சொஞ்சம் அலைச்சலை தந்தாலும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக அமையும்.
துலாம்
65/100 (பரவாயில்லை)
தோல்விகளைக் கண்டு துவளாமல் விசையுறு பந்துபோல் மீண்டும் எழும் நீங்கள், கடினமாக உழைத்து முன்னேறத்துடிப்பவர்கள். உங்கள் ராசிநாதன் சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் ஓரளவு பணப்புழக்கத்தையும், மகிழ்ச்சியையும் எதிர்பார்க்கலாம். குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். மே, ஜீன், ஜீலை மாதங்களில் குரு உங்கள் ராசிக்கு 5-ல் அமர்வதால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். பிள்ளை பாக்யம் கிடைக்கும். பட்டதாரியாக இருந்தும் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை அமையாமல் அலைந்து, திரிந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள், உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். செப்டம்பர், அக்டோபர் மத்திய பகுதியில் பணவரவு அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். வி.ஐ.பிகளால் ஆதாயம் உண்டு. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். புது வீடு மாறுவீர்கள். பழைய கடன் பிரச்சனைகள் தீரும். ராகு-கேது சாதகமாக வருட கடைசியில் மாறுவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். பிப்ரவரி முதல் மே மாதம் வரை உங்கள் ராசிநாதன் 6-ம் வீட்டிலேயே மறைந்து கிடப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். வீண் சந்தேகம், எதிர்பாராத விபத்துகள், கெட்டவர்களின் நட்பு, மூட்டு வலி வந்து நீங்கும். ஜீலை மற்றும் ஆகஸ்டு மத்திய பகுதி வரை செவ்வாய் 8-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கர்பப்பை கோளாறு, இரத்த சோகை, உடன்பிறந்தவர்களால் செலவுகள், தாயாருடன் வீண் வாக்குவாதங்கள், வாகனப் பழுது வந்து நீங்கும். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். அக்டோபர் மத்திய பகுதி முதல் நவம்பர் மையப் பகுதி வரை சூரியன் உங்கள் ராசிக்குள் இருப்பதால் அடி வயிற்றில் வலி, கண் எரிச்சல், முழங்கால், கணுக்கால் வலி வந்து நீங்கும். பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். 26.9.2009 ஏழரை சனி தொடங்குவதால் முன்பின் தெரியாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்கள் காணாமல் போகும். பழைய கசப்பான சம்பவங்கள் மனதை வாட்டும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வருடபிற்பகுதியில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சக ஊழியர்களிடம் மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் அளவிற்கு பொறுமையும், நிதானமும் தேவைப்படும் வருடமிது.
விருச்சிகம்
70/100 (நலம்)
மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடைய நீங்கள், குற்றம் குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக் கூடியவர்கள். கொடுத்துச் சிவந்த கைகளையுடையவர்கள். மற்றவர்கள் பின்வாங்கும் செயல்களை தானாக முன்வந்து செய்யக் கூடியவர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாயின் சாரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தன்னம்பிக்கை துளிர்விடும். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். பிப்ரவரி முதல் மே மாதம் வரை சுக்ரன் உங்களின் பூர்வ புண்ய ஸ்தானத்தில் நிற்பதால் புது மனை புகுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வெகுநாட்களாக வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சகோதர வகையில் நன்மை கிட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். புது வேலை அமையும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் பழைய பிரச்சனைகள் தீரும். மகளுக்கு திருமணம் முடியும். வேற்றுமதத்தவர் உதவுவார். நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுக்ரன் சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். நட்பால் ஆதாயமடைவீர்கள். மே, ஜீன், ஜீலை மாதங்களில் குரு 4-ம் வீட்டில் அமர்வதால் பணப்பற்றாக்குறை, வீண் அலைச்சல், மனஉளைச்சல், சிறுசிறு விபத்து வந்து நீங்கும். தாயா£ரின் உடல் நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்களே என்று குடும்ப ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஜீலை மையப்பகுதியிலிருந்து, ஆகஸ்டு மையப்பகுதி வரை சூரியன் 9-ம் வீட்டில் இருப்பதால் தலைச் சுற்றல், மூட்டு வலி, பல் வலி தந்தையுடன் கருத்து மோதல்கள், உஷ்ணக் கட்டிகள் வந்து நீங்கும். சேமிப்புகள் கரையும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ஆகஸ்டு மையப் பகுதி முதல்-அக்டோபர் மையப் பகுதி வரை செவ்வாய் 8-ம் வீட்டிற்கு வருவதால் வாகன விபத்துகளும், வழக்கால் சிக்கலும் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். கூட்டுத் தொழிலில் பழைய பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களின் திறமையை கண்டு வியப்பார். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். இந்த புத்தாண்டு கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.
தனுசு
60/100 (மோசமில்லை)
அல்லல்கள் வந்தாலும் கொள்கைகளை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாது எடுத்தக்காரியங்களை முடித்துக்காட்டும் திறமைபடைத்த நீங்கள், கடலளவு அன்புகொண்டவர்கள். உங்கள் ராசிநாதன் குருபகவான் தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் வேளையில் இந்தப்புத்தாண்டு பிறப்பதால் எதிர்பாராத வெற்றி உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த பழைய பிரச்சனைகள் தீரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மனைவிக்கு இருந்த மாதவிடாய்க் பிரச்சனை, கழுத்து வலி விலகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். காற்றோட்டம், தண்ணீர் வசதி, வெளிச்சம் உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணவரவு திருப்திகரமாக அமையும். மகனின் அலட்சியப்போக்கு மாறும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மத்தியப் பகுதி வரை உள்ள காலகட்டங்களில் திடீர் யோகம் உண்டாகும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். புது நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். ஜீன் மற்றும் ஜீலை மத்தியப் பகுதிக்குள் சொத்து வாங்குவது விற்பது சுலபமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். ஜனவரி மாதத்தில் உங்கள் ராசி நெருப்பு கிரகங்களின் பிடியில் வருவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல், களைப்பு வந்து நீங்கும். குடும்பத்தில் யாரும் தன்னை புரிந்து கொள்ள வில்லை என சில சமயங்களில் வருந்துவீர்கள். முன்கோபம் தவிர்ப்பது நல்லது. ஏப்ரல் மத்தியிலிருந்து மே மாதத்தின் மையப் பகுதி வரை சூரியன் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளின் போக்கை கண்காணியுங்கள். அவர்களின் கெட்டநண்பர்களை ஒதுக்கப் பாருங்கள். செரிமானக் கோளாறு, நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும். அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் மறைவதால் உடன்பிறந்தவர்களுடன் மோதல்கள் வரும். வழக்குகளில் கவனமாக செயல்படுங்கள். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனையை அதிகாரி ஏற்பார். ஊழியர்கள் மறைமுகமாக உங்களை எதிர்ப்பார்கள். சில சலுகைகள் கிடைக்கும். வேலைச்சுமை அதிகரித்தாலும் பாராட்டுக் கிட்டும். இந்தப் புத்தாண்டு குறுகிய மனப்பான்மையிலிருந்து உங்களை விடுபட வைத்து பரந்த மனசால் வெற்றி பெற வைக்கும்.
மகரம்
40/100 (சிரமம்)
எந்த வேலையில் ஈடுபட்டாலும் முறைப்படி அதை முழுமையாகச் செய்து முடிக்கும் நீங்கள், நல்லதுகெட்டது தெரிந்துசெயல்படக்கூடியவர்கள். ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஒருபோது ஆசைப்படாதவர்கள். உங்களின் தன வீட்டான 2-வது ராசியில் இந்த வருடம் பிறப்பதால் முணுமுணுத்துக் கொண்டிருந்த நீங்கள் முன்னேற புதுவழி கிடைக்கும். மார்ச் மாத மத்தியிலிருந்து திடீர் பணவரவு உண்டு. உங்களின் பிரபல யோகாதிபதி சுக்ரன் இந்த வருடம் முழுக்க வலுவாக இருப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிபுகும். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். கடனில் ஒருபகுதியையாவது பைசல் செய்ய வழி பிறக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. இனி வீட்டில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். வாகனம் இருந்தும் பெட்ரோல் நிரப்ப முடியாத அளவிற்கு அவஸ்தைப் பட்டீர்களே! இனி அந்த நிலை மாறும். எதிர்பார்த்த பணம் வரும். மே, ஜீன், ஜீலை மாதங்களில் குரு உங்கள் ராசியை விட்டு விலகுவதால் கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் உயரும். புது வேலை மாறுவீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கிட்டும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் சகோதர பகை நீங்கும். சொத்துப் பிரச்சனையை சுமுகமாக பேசி தீர்ப்பீர்கள். செப்டம்பர் இறுதிபகுதியிலிருந்து அஷ்டமத்துச் சனி விலகுவதால் தாழ்வு மனப்பான்மை, மறதி விலகும். அக்டோபர் பிற்பகுதியிலிருந்து ராகு,கேது சாதகமாவதால் வீண் பழி, மனஉளைச்சல் நீங்கும். நோய்கள் குணமாகும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வாகன விபத்துகள் வரக்கூடும். அக்டோபர் மாதத்தில் மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். கெட்ட நண்பர்களின் சகவாசங்களை ஒதுக்கித் தள்ளுங்கள். அண்டை வீட்டாருடன் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மறைமுக அவமானங்கள் ஏற்பட்டாலும் அனுசரித்துப் போவது நல்லது. இந்தப் புத்தாண்டு குனிந்திருந்த உங்களை நிமிர வைப்பதுடன் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.
கும்பம்
50/100 (பிரச்னை)
எறும்புபோல் அயராது உழைத்து, தேனீபோல் சேமிக்கும் இயல்பு உடைய நீங்கள் எப்போதும் நல்லதே நினைப்பவர்கள். உங்களின் சுக பாக்யாதிபதியான சுக்ரன் உங்கள் ராசிக்குள் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் நீண்ட நாள் லட்சியங்கள் நிறைவேறும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். ஜனவரி மாதத்தில் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை குடும்ப ஸ்தானத்தை சுக்ரன் உச்சமாவதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தாம்பத்யம் இனிக்கும். விலையுர்ந்த உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வாகன வசதிப் பெருகும். ஏப்ரல் மாத மத்தியிலிருந்து ஆகஸ்ட் மாதத்தின் மத்தியப்பகுதி வரை உள்ள காலகட்டத்தில் குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். தந்தையுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். அக்டோபர் 7-ந் தேதியிலிருந்து செவ்வாய் 6-ம் வீட்டில் மறைவதால் வழக்குகள் சாதகமாகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். மகளின் கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மகன் பொறுப்பாக நடந்து கொள்வார். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரிகளின் நட்பு கிட்டும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் பொருட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 13 வரை உங்கள் ராசியை நெருப்பு கிரகங்கள் சூழ்வதால் சளித் தொந்தரவு, இரத்த அழுத்தம் அதிகரித்தல், காரியத் தடை, முன்கோபம் வந்து விலகும். தாய் வழி உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். இக்காலகட்டத்தில் அரசுக்கு அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிதானித்து செயல்படுங்கள். செலுத்த வேண்டிய வரிகளை உரிய காலகட்டங்களில் செலுத்துவது நல்லது. மே, ஜீன், ஜீலை மாதங்களில் உங்கள் ராசிக்குள்ளேயே குரு நுழைவதால் கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வரும். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். செப்படம்பர் பிற்பகுதியிலிருந்து அஷ்டமத்துச் சனி வருவதால் யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள், மனஉளைச்சல், இழப்புகள், வதந்திகள், விபத்துகள் வந்து நீங்கும். இருந்தாலும் அக்காலகட்டத்தில் செவ்வாய் சாதகமாக இருப்பதால் பாதிப்புகள் குறையும். வியாபாரத்தில் லாபம் எதிர்பாராத தன லாபம் வரும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். இரும்பு, மருந்து வகைகள் ஆதாயம் தரும். கூட்டுத்தொழிலில் நிதானம் தேவை. உத்யோகத்தில் சக ஊழியர்களின் எதிர்ப்புகள் இருந்தாலும் மேலதிகாரி உங்களுக்கு ஆதரவாக பேசுவார். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இந்தப் புத்தாண்டு அவ்வப் போது உங்களை அலைய வைத்தாலும் புதிய தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதாக அமையும்.
மீனம்
80/100 (நல்லாயிருக்கு)
மண் குடிசையில் இருந்து மாளிகை வீட்டிற்குள் குடி புகுந்தாலும் பழசை மறக்கவும் மாட்டீர்கள். மறைக்கவும் மாட்டீர்கள். உங்கள் ராசிநாதன் லாபவீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிலும் ஏற்றம் உண்டாகும். தாழ்வு மனப்பான்மை, மனஉளைச்சல் நீங்கும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகம். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் பிடிவாதம் விலகும். பழைய கடன் தீரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஏளனமாகப் பார்த்த உறவினர்களுக்கு பதிலடி தருவீர்கள். மழலை பாக்யம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நிலம், வீடு வாங்குவதில் இருந்த சிக்கல்கள் தீரும். கமிஷன் மூலம் பணம் வரும். ஜனவரி, பிப்ரவரி, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் திடீர் திருப்பம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணி விரைந்து முடியும். அரசு காரியங்களில் வெற்றி கிட்டும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரை ராசிக்குள் சூரியன் செல்வதால் வயிற்று வலி, வீண் வாக்குவாதங்கள், உடல் உஷ்ணம் அதிகரித்தல், மனக்குழப்பம், காரியத் தாமதம் வந்து நீங்கும். மார்ச் 6 முதல் மே 22 வரை செவ்வாயின் போக்கு உடன்பிறந்தவர்களிடம் விவாதங்கள் வேண்டாம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். கோபத்தால் நல்ல நண்பர்களை இழக்க நேரிடும். அக்காலக்கட்டங்களில் கர்ப்பினிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. மின்சாரம், மின்னணு சாதனங்கள் பழுதாகும். வாகனப் பழுது வந்து நீங்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் மனதளவில் இருந்த போராட்டங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வேலைசுமை குறையும். இந்த 2009-ம் ஆண்டு உங்களுக்கு சமூகத்தில் வி.ஐ.பி அந்தஸ்தை தரும்.
Abonnieren
Kommentare zum Post (Atom)

Keine Kommentare:
Kommentar veröffentlichen